/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாய தொழிலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 31, 2026 06:47 AM

கடலுார்: கடலுார் தலைமை தபால்நிலையம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் ஒன்றிய தலைவர் அய்யாதுரை தலைமை தாங்கினார். வட்ட செயலாளர்கள் பண்ருட்டி பன்னீர், கடலுார் வைத்திலிங்கம், நெல்லிக்குப்பம் பகுதி செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் கிருஷ்ணன், பண்ருட்டி வட்ட தலைவர் லோகநாதன், பொருளாளர் கொளஞ்சியப்பன், நெல்லிக்குப்பம் பகுதி தலைவர் வெங்கடேசன், பொருளாளர் வேலு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது, உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

