/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணி
/
கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணி
ADDED : அக் 15, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கோரிக்கை அட்டை அணிந்து செவிலியர்கள் பணி செய்தனர்.
கடந்த 2015ல் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளை அணிந்து கொண்டு மாவட்டம் வாரியாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி செய்தனர்.
அதன்படி, கடலுார் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 120 செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர்.