ADDED : அக் 12, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். பிரியா, சங்கீதா, ஆதிலட்சுமி, செல்வி முன்னிலை வகித்தனர்.
முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் துவக்க உரையாற்றினார். மாவட்ட அமைப்பு குழு தலைவர் ரங்கசாமி விளக்க உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், சத்துணவு திட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
சமூக நலத்துறையில் சிம்கார்டு வழங்குவதை நிறுத்தி வைத்து பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.