/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சமையலரிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம்; சத்துணவு மேற்பார்வையாளர் கைது
/
சமையலரிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம்; சத்துணவு மேற்பார்வையாளர் கைது
சமையலரிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம்; சத்துணவு மேற்பார்வையாளர் கைது
சமையலரிடம் ரூ. 2 ஆயிரம் லஞ்சம்; சத்துணவு மேற்பார்வையாளர் கைது
ADDED : பிப் 01, 2025 12:19 AM

சேத்தியாத்தோப்பு: பள்ளி சமையலரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ற சத்துணவு திட்ட மேற்பார்வையாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் காலை சத்துணவு திட்டத்தின் புவனகிரி வட்டார மேற்பார்வையாளர் இரண்டு நாட்களுக்கு முன் மிராளூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உணவு பொருட்களை ஆய்வு செய்தார். அப்போது, சேமியா பாக்கெட் குறைந்தது. இதுதொடர்பாக சமையலர் சவுந்தர்யா,40;விற்கு மெமோ கொடுக்கப்பட்டது. அதன்மீது, நடவடிக்கை எடுக்காமல் இருக்க செந்தமிழ்செல்வி ரூ.2,000 லஞ்சம் கேட்டார்.
இதுகுறித்து சவுந்தர்யா லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். அதனைத் தொடர்ந்து போலீசாரின் வழிகாட்டுதலின்படி நேற்று, செந்தமிழ்செல்வியை மிராளூருக்கு வரவழைத்து பணத்தை கொடுத்தார்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமையிலான போலீசார், செந்தமிழ்செல்வியை கையும், களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.