ADDED : ஜன 20, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அரசு மருத்துவமனையில் உள்ள ஏ.ஆர்.டி., மையத்தில் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டசத்து பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மருத்துவ அலுவலர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் தொழுநோய் பிரிவு மாவட்ட துணை இயக்குனர் சித்திரைச் செல்வி, 120 சிறுவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியை ஏ.ஆர்.டி., மைய ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் ஒருங்கிணைப்பு செய்தார்.