ADDED : அக் 27, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்,: கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் சமத்துவ தீபாவளி இனிப்பு மற்றும் புத்தாடை வழங்கும் விழா நடந்தது.
நலப் பணிகள் இணை இயக்குனர் ஹிரியன் ரவிக்குமார் தலைமை தாங்கினார். கண்காணிப்பாளர் நடராஜன், நிலைய மருத்துவர் கவிதா, துணை இயக்குனர் பாலகுமாரன் முன்னிலை வகித்தனர். ஏ.ஆர்.டி., மைய மருத்துவர் ஸ்ரீதரன், மகப்பேறு மருத்துவர் பரமேஸ்வரி ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினர் மாநகரட்சி கமிஷனர் அனு, குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக இளம் கடலுார் அமைப்பு வனிதா சபரீசன், சண்முகராஜா, சுகந்தி மளிகை செல்லபாண்டியன், தன்னார்வலர்கள் முகமது, கிருபாகரன், தனலட்சுமி செயல்பட்டனர்.
செவிலியர் கண்காணிப்பாளர் பிரேமலதா நன்றி கூறினார்.