/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புரோக்கர்கள் ஆதிக்கத்தில் சார் பதிவாளர் அலுவலகம் தலைமை இன்றி தள்ளாடுகிறது...
/
புரோக்கர்கள் ஆதிக்கத்தில் சார் பதிவாளர் அலுவலகம் தலைமை இன்றி தள்ளாடுகிறது...
புரோக்கர்கள் ஆதிக்கத்தில் சார் பதிவாளர் அலுவலகம் தலைமை இன்றி தள்ளாடுகிறது...
புரோக்கர்கள் ஆதிக்கத்தில் சார் பதிவாளர் அலுவலகம் தலைமை இன்றி தள்ளாடுகிறது...
ADDED : ஜன 31, 2024 02:16 AM
கடலுார் மாவட்டத்தில், அதிக பத்திரப்பதிவு நடைபெறும் அலுவலகமாக, சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. சேத்தியாத்தோப்பு சுற்றியுள்ள 60 கிராமங்களை சேர்ந்தவர்கள் பத்திரவு பதிவு, பாக பரிவினை, வில்லங்கம் எடுத்தல், திருமண பதிவு உள்ளிட்டவைகளுக்கு இங்கு வருகின்றனர். இங்கு சார் பதிவாளராக இருந்தவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு மாற்றப்பட்டார். அதுமுதல் புதிய அதிகாரி நியமிக்கப்படாமல், தலைமை எழுத்தரின் பொறுப்பில் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த சார் பதிவாளர் அலுவலகம் மீது, ஏற்கனவே, பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது, பதிவு பெறாதா ஆவண எழுத்தர்கள் மற்றும் புரோக்கர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
கடலுார் மாவட்டத்திலே அதிக பத்திரப்பதிவு நடைபெறும் சேத்தியாத்தோப்பு சார்பதிவாளர் அலுவலகம் பதிவாளர் இல்லாமல், தள்ளாட்டத்தில் இயங்குவதால், சாமானிய விவசாய மக்கள கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பதிவாளர் இல்லாததை பயன்படுத்தி, பதிவு பெறாதா எழுத்தர்கள் பணம் வாங்கி தரும் புரோக்கர்களாக செயல்பட்டு சுலபமாக பத்திர பதிவு செய்து விடுகின்றனர். அனைத்து ஆவணங்களும் இருந்தும் புரோக்கர்கள் இல்லாமல் அலுவலகத்திற்கு நேரடியாக செல்லும் பொதுமக்களை அங்குள்ள ஊழியர்கள், பல்வேறு காரணங்கள் கூறி காலதாமப்படுத்தி அலையவிடுகின்றனர்.
பாமர மக்கள் சென்று தகவல்களை கேட்டாலும் அங்கிருக்கும் புரோக்கர் மூலம் மட்டுமே அனுக முடியும் என்ற நிலை உள்ளது.
எனவே, சேத்தியாத்தோப்புக்கு புதிய சார் பதிவாளரை நியமிக்க, பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.