/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரியராவி ரேஷன் கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
/
அரியராவி ரேஷன் கடையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
ADDED : ஜூன் 14, 2025 07:02 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே முறையாக பொருட்கள் வழங்காத ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த அரியராவியில் உள்ள ரேஷன் கடையில் கடந்த மாதம் 100க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கவில்லை. இதற்கு பதிலாக அடுத்த மாதம் (இம்மாதம்) சேர்த்து வழங்குவதாக விற்பனையாளர் தெரிவித்து கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கினார்.
நேற்று முன்தினம் ரேஷன் பொருட்கள் வாங்க கிராம மக்கள் கடைக்கு சென்றனர். அப்போது, கடந்த மாதத்திற்கான பொருட்கள் வழங்க முடியாது, பொருட்கள் வரத்து குறைவாக உள்ளதாக கூறினார். ஆத்திரமடைந்த கிராம மக்கள் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
அதைத்தொடர்ந்து, நேற்று மதியம் 2:30 மணிக்கு வந்த திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் புஷ்பராஜ், நல்லுார் கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் சுப்ரமணியன் ஆகியோர் ரேஷன் கடையில் பொருட்களின் இருப்பு விபரம், பதிவேடுகள், எடை இயந்திரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர், கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படும் என தெரிவித்தனர்.