/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாரிகள் பேச்சுவார்த்தை மா.கம்யூ., போராட்டம் வாபஸ்
/
அதிகாரிகள் பேச்சுவார்த்தை மா.கம்யூ., போராட்டம் வாபஸ்
அதிகாரிகள் பேச்சுவார்த்தை மா.கம்யூ., போராட்டம் வாபஸ்
அதிகாரிகள் பேச்சுவார்த்தை மா.கம்யூ., போராட்டம் வாபஸ்
ADDED : நவ 20, 2024 07:20 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பால இணைப்பு சாலையை சீரமைக்க கோரி, மா.கம்யூ., கட்சியினரின் மறியல் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் வாபஸ் பெறப்பட்டது.
பரங்கிப்பேட்டை- கிள்ளை இடையே உள்ள வெள்ளாற்றின் குறுக்கே பாலம் உள்ளது.
இப்பாலத்தில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் இணைப்பு சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சாலையை சீரமைக்க கோரி, மா.கம்யூ., கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, மா.கம்யூ., மாநிலக்குழு ரமேஷ்பாபு, வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர் விஜய், நகர செயலாளர் வேல்முருகன், ஊராட்சி தலைவர் ஜெயசீலன், கவுன்சிலர்கள் அருள்முருகன், ராஜேஸ்வரி வேல்முருகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர், பெரியமதகு அருகே சாலை மறியல் செய்ய முயன்றனர்.
இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா, பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகணன், துணை தாசில்தார் பழனி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பேரூராட்சி பொதுநிதியில் இருந்து மூன்று மாதத்திற்குள் சாலை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைதொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு மா.கம்யூ., கட்சியினர் கலைந்து சென்றனர்.

