/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ரூ. 3.93 லட்சம் சிக்கியது
/
மாவட்டத்தில் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ரூ. 3.93 லட்சம் சிக்கியது
மாவட்டத்தில் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ரூ. 3.93 லட்சம் சிக்கியது
மாவட்டத்தில் அதிகாரிகள் அதிரடி வாகன சோதனையில் ரூ. 3.93 லட்சம் சிக்கியது
ADDED : மார் 20, 2024 05:18 AM

கடலுார் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் நான்கு இடங்களில் நடத்திய வாகன சோதனையில் நேற்று ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 3 லட்சத்து 93 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்காடு அருகே நேற்று 12.15 மணியளவில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர், சிவக்குமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த கடலுார் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த சந்துரு என்பவர், உரிய ஆவணங்களின்றி 1 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்து வந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோன்று, காலை 9:16 மணிக்கு நிலையான கண்காணிப்பு குழு தாசில்தார் அமர்நாத் தலைமையில் குறிஞ்சிப்பாடி பட்டிப்பாக்கம் ஜங்ஷன் ரோட்டில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, பண்ருட்டி சாத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவர், ஈச்சர் லாரியில், 69 ஆயிரம் ஆவணங்களின்றி எடுத்து வந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
சிறுபாக்கம்
விருத்தாசலம் - சேலம் சாலையில், சிறுபாக்கம் அடுத்த அடரியில் தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று பகல் 12:30 மணியளவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலம் மாவட்டம், மணிவிழுந்தான் கிராமத்தை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் உரிய ஆவணங்களின்றி ரூ.80 ஆயிரம் பணத்தை லாரியில் எடுத்து வந்தது தெரியவந்து பறிமுதல் செய்து, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ஒப்படைத்தனர்.
அதேபோல், சிறுபாக்கம் சோதனை சாவடியில் புள்ளியல் துறை ஆய்வாளர் வித்யபிரகாஷ் தலைமையிலான தேர்தல் கண்காணிப்பு குழு வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். பகல் 1.50 மணியளவில் சேலம் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், தர்மபுரி மாவட்டம், கோட்டப்பட்டியை சேர்ந்த சங்கர் என்பவர், 94 ஆயிரம் பணத்தை ஆவணங்கள் இன்றி எடுத்து சென்றது தெரியவந்து, பறிமுதல் செய்யப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் நான்கு இடங்களில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் 3 லட்சத்து 93 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
-நமது நிருபர்-

