/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் நடவு வயல்கள் அதிகாரிகள் ஆய்வு
/
நெல் நடவு வயல்கள் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 13, 2025 12:34 AM

நெல்லிக்குப்பம் : குறுவை தொகுப்பு மானியம் வழங்க நெல் நடவு வயல்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழக அரசு குறுவை நெல் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இயந்திரம் மூலம் நெல் நடவு செய்தால் ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபாய் மானியம் உட்பட பல மானியங்களை வழங்குகிறது.
அண்ணாகிராமம் வட்டாரத்தில் பல நுாறு ஏக்கர் பரப்பில் விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்துள்ளனர்.
அவியனுார், பைத்தாம்பாடி பகுதிகளில் விவசாயிகள் நடவு செய்துள்ள நெல் வயல்களை துணை இயக்குனர் விஜயராகவன் ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார். வட்டார வேளாண்மை அலுவலர் விஜய், உதவி விதை அலுவலர்கள் ரமேஷ், முத்துராமன், உதவி வேளாண்மை அலுவலர்கள் பாஸ்கல்ராஜ், ராபர்ட் உடனிருந்தனர்.

