/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஐகோர்ட் உத்தரவிட்டும் அதிகாரிகள் 'குறட்டை'
/
ஐகோர்ட் உத்தரவிட்டும் அதிகாரிகள் 'குறட்டை'
ADDED : மார் 12, 2024 11:54 PM
கடலுார் மாவட்டத்தில், விருத்தாசலம், சிதம்பரம், புவனகிரி, வடலுார், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட இடங்களில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டன. சேத்தியாத்தோப்பில் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் நெடுஞ்சாலை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் மூலம், 2019ல் அளவீடு செய்தனர். ஆனாலும், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு உள்ளதாக கூறி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவது கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாதம் 24ம் தேதி சென்னை ஐகோர்ட், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு 6 வாரங்கள் கெடு கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களிலும், வீடுகள், கடைகள், வணிக வளாகங்களில் நோட்டீஸ் ஒட்டினர். ஒலி பெருக்கி மூலம், ஆக்கிரமிப்புகளை 7 நாட்களில் தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும் என, அறிவிப்பு செய்தனர். ஆனாலும், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்காமல், அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
இதனால், ஐகோர்ட் உத்தரவை அதிகாரிகள் நடைமுறை படுத்துவார்களா, அல்லது கண்டும் காணாமல் விட்டுவிடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

