/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வளர்ச்சி திட்டப் பணிகளில் கல்லா கட்டும் அதிகாரிகள்
/
வளர்ச்சி திட்டப் பணிகளில் கல்லா கட்டும் அதிகாரிகள்
வளர்ச்சி திட்டப் பணிகளில் கல்லா கட்டும் அதிகாரிகள்
வளர்ச்சி திட்டப் பணிகளில் கல்லா கட்டும் அதிகாரிகள்
ADDED : ஜூலை 30, 2025 07:42 AM
கடலுார் மாவட்டத்தின் பெரிய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் பல கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.
ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த பின்பு, நியமிக்கப்பட்டுள்ள தனி அலுவலர்கள் ஆளும் கட்சியின் ஆதரவுடன் அனைத்து திட்டப் பணிகளிலும் பணத்தை சுருட்டுவதிலேயே குறியாக உள்ளனர்.
கான்கிரீட் வீட்டிற்கு பத்தாயிரம் ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்துகின்றனர். மேலும், பல்வேறு காரணங்களால் பணியிட மாற்றம் செய்யப்படும் ஊராட்சி செயலாளர்களை மீண்டும் பழைய இடத்திற்கே பணியமர்த்த 50ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஊராட்சிகளில் குடிநீர், சாலை வசதி, தெரு மின்விளக்கு, சுகாதாரம், துாய்மைப்பணி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட செலவுகளுக்கான பில்களை அனுமதிக்க அலுவலகத்தில் கமிஷன் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு ஆளும் கட்சி நிர்வாகிகளும் ஆதரவு தெரிவிப்பதால், அதிகாரிகள் தீவிர வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.