/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாரிகள் பணியிடம் காலி நகராட்சியில் பணிகள் பாதிப்பு
/
அதிகாரிகள் பணியிடம் காலி நகராட்சியில் பணிகள் பாதிப்பு
அதிகாரிகள் பணியிடம் காலி நகராட்சியில் பணிகள் பாதிப்பு
அதிகாரிகள் பணியிடம் காலி நகராட்சியில் பணிகள் பாதிப்பு
ADDED : ஜூலை 07, 2025 01:49 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நெல்லிக்குப்பம் நகராட்சியில் கட்டட ஆய்வாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கு யாரைம் இதுவரை நியமிக்காததால் அனுமதி பெறாமலேயே பலர் கட்டடங்களை கட்டி வருகின்றனர். இதனால், நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதேப் போன்று, இன்ஜினியர் பணியிடமும் காலியாக உள்ளது. நகராட்சியில் சாலை, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது. இப்பணிகளை கண்காணிக்கும் மேற்பார்வையாளர் அலுவலக பணியையும் கூடுதலாக கவனிப்பதால் பணிகளை சரியான முறையில் கண்காணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
துப்புரவு ஆய்வாளர் பணியிடமும் காலியாக உள்ளதால் துப்புரவு பணிகள் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, நகராட்சியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.