/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் தொட்டியில் ஆயில் கலப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு
/
குடிநீர் தொட்டியில் ஆயில் கலப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு
குடிநீர் தொட்டியில் ஆயில் கலப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு
குடிநீர் தொட்டியில் ஆயில் கலப்பு விருத்தாசலம் அருகே பரபரப்பு
ADDED : ஜூலை 22, 2025 06:43 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் ஆயில் கலந்த சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அருகே சு.கீணனுார் கிராத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், வழக்கம்போல், நேற்று மதியம் 1:00 மணிக்கு மேல்நிலை தொட்டியில் இருந்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது, குழாயில் இருந்து கருப்பு நிறமாக தண்ணீர் வந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த வந்த கம்மாபுரம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், பிளீச்சிங் பவுடர் கலக்கும் பைப் வழியாக, மர்ம நபர்கள் ஆயிலை கலந்து சென்றது தெரிந்தது. போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.