sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பழைய கலெக்டர் அலுவலக கட்டடம்... புனரமைப்பு; ரூ.16 கோடியில் பணிகள் துவக்கம்

/

பழைய கலெக்டர் அலுவலக கட்டடம்... புனரமைப்பு; ரூ.16 கோடியில் பணிகள் துவக்கம்

பழைய கலெக்டர் அலுவலக கட்டடம்... புனரமைப்பு; ரூ.16 கோடியில் பணிகள் துவக்கம்

பழைய கலெக்டர் அலுவலக கட்டடம்... புனரமைப்பு; ரூ.16 கோடியில் பணிகள் துவக்கம்


ADDED : ஜூலை 02, 2025 06:20 AM

Google News

ADDED : ஜூலை 02, 2025 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கட்டடம் பாழாகி வருவதைத் தவிர்க்க, பழமை மாறாமல் புதுப்பிக்க 16 கோடி ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து புனரமைப்பு பணி துவங்கியது.

கடலுார், மஞ்சக்குப்பம் மைதானம் அருகே அமைந்துள்ளது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் கலெக்டர் அலுவலகம் இயங்கி வந்தது. இக்கட்டடம் கடந்த 1897ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 127 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக உள்ளது.

கடலுாரில் ஆங்கிலேயர் கால வரலாற்று பொக்கிஷமான பழைய கலெக்டர் அலுவலக கட்டடம், பராமரிப்பின்றி செடிகள் முளைத்து பலவீனமாகி வருகிறது.

டில்லியில் இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்த கிளைவ் என்பவர் பணி நிமித்தம் காரணமாக கடலுார் மாவட்டம் வருகை தந்தபோது பழைய கலெக்டர் அலுவலகம், கலெக்டர் முகாம் அலுவலகம் ஆகிய கட்டடங்களை பார்த்து வியந்தார். அக்காலத்தில் கட்டப்பட்ட கட்டங்களின் கட்டட கலை எந்த அளவு சிறப்பாக இருக்கிறது என்று அப்போதைய கலெக்டரிடம் கூறி வியந்தார்.

கலெக்டர் அலுவலகமாக செயல்பட்ட இங்கு, ஹேரிடெய்லர் முதல் சுரேஷ்குமார் வரை 130 கலெக்டர்கள் பணியாற்றியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் கடலுார் செம்மண்டலம் தென் பெண்ணையாற்றங்கரையில், புதிய கட்டடத்திற்கு கலெக்டர் அலுவலகம் மாற்றப்பட்டது. தற்போது, கருவூலம், வனத்துறை, மீன்வளத்துறை, அருங்காட்சியகம் உள்ளிட்ட சில அரசு துறை அலுவலகங்கள் மட்டும் இங்கு இயங்கி வருகிறது.

பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ள இக்கட்டடத்தில் சில இடங்களில் மழைக்காலங்களில் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. துாசு படிந்த நிலையில், கட்டடம் அலங்கோலமாக மாறியுள்ளது.

கட்டடத்தில் பல இடங்களில் செடிகள் முளைத்து பலவீனமாகி வருகிறது. இதே நிலை நீடித்தால், விரைவில் கட்டடம் முழுதும் வீணாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. கட்டடத்தில் பல இடங்களில் வவ்வால்கள் அடைந்துள்ளதால், துர்நாற்றமும் வீசுகிறது.

எனவே, பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தை, பழமை மாறாமல் புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என, மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டில் கடலுார் சப் கலெக்டராக இருந்த ஜானிடாம் வர்கீஸ், பழைய கலெக்டர் அலுவலகத்தை புதுப்பிக்க முதற் கட்ட முயற்சியில் இறங்கி, சென்னையில் இருந்து கட்டடக்கலை நிபுணர்களை வரவழைத்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், கலெக்டர் பாலசுப்ரமணியம் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கட்டடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட புகழ்பெற்ற இந்த கட்டடம் பாரம்பரியம் மாறாமல் புனரமைக்க திட்டமிடப்பட்டு அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டது. அதன்படி தற்போது இக் கட்டடத்தை புனரமைக்க 16 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து புனரமைக்கும் பணி துவங்கியது.






      Dinamalar
      Follow us