ADDED : மார் 12, 2024 06:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி, : பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 70வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஐந்து வயது சிறுமி, நேற்று காலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த தியாகராஜன்,70, என்ற முதியவர், சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
அவ்வழியே சென்ற பெண் ஒருவர், அதனை பார்த்து கூச்சலிடவே, , பொதுமக்கள் சேர்ந்து தியாகராஜனை பிடித்து ஆவினங்குடி போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் பேரில் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து தியாகராஜனை கைது செய்தனர்.

