ADDED : நவ 05, 2025 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருகே முதியவர் சுருண்டு விழுந்து இறந்தார்.
புவனகிரி செட்டி தெருவை சேர்ந்தவர் யுவராஜ், 64; உடல்நிலை பாதிக்கப்பட்டு சில ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் புவனகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மதியம் வீட்டிற்கு வந்தார்.
அப்போது சிறிது நேரம் வீட்டில் அமர்ந்து இருந்தவர் திடீரென மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார்.
அவரை உறவினர்கள் புவனகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

