ADDED : ஜன 25, 2024 04:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரியில் சாலையோரம் நடந்து சென்ற முதியவர் பைக் மோதி உயிரிழந்தார்.
புவனகிரி ஆதிவராகநத்தம் எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்தவர் சம்மந்தம், 68; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு புவனகிரி சாலையில் நடந்து சென்றார். அங்குள்ள வீரன்கோவில் அருகே வந்தபோது, எதிரே வந்த பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.