ADDED : பிப் 09, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: சிதம்பரம் அருகே லாரி மோதி, சைக்கிளில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.
சிதம்பரம் அடுத்த கீழ் அனுவம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி, 67; இவர், நேற்று சைக்கிளில் சி.முட்லுார் மண்டபம் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். சாலைக்கரை அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி முனுசாமி உயிரிழந்தார்.
இதுகுறித்து கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விவேக், வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

