ADDED : பிப் 23, 2024 12:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவர் பைக் மோதி உயிரிழந்தார்.
புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுாரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 60; சிமெண்ட் கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று புதுச்சத்திரம் - பரங்கிப்பேட்டை சாலையில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் வந்த பைக் மோதியது.
பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புதுசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.