ADDED : அக் 21, 2026 12:47 AM
அ நிறம் | அளவு
சிறுபாக்கம்: அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுபாக்கம் அடுத்த வடபாதி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது விவசாய கிணறு அருகே அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக சிறுபாக்கம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு, சென்ற போலீசார் அவரது சடலத்தை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து இறந்த முதியவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
