
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில், மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி, 75; கடந்த 1ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவரை காணவில்லை. சற்று மனநலம் சரியில்லாதவர் என கூறப்படுகிறது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் கோபாலகிருஷ்ணன் அளித்த புகாரில், ரெட்டிச்சாவடி போலீசார்வழக்குப் பதிந்து முத்துசாமியை தேடி வருகின்றனர்.