நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் முதியவரை காணவில்லை என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் பட்டீஸ்வரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 79; கடந்த 21ம் தேதி காலை வடலூர் சென்று வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.