ADDED : டிச 04, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரத்தில் மூதாட்டியின் உடல் மற்றும் கண்கள் தானமாக பெறபட்டது.
சிதம்பரம் அடுத்துள்ள பூதவராயன்பேட்டையை சேர்ந்த வேதவல்லி, 75; என்பவர் வயது மூப்பு காரணமாக இறந்தார். அதனையடுத்து, சிதம்பரம் ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன், இறந்த மூதாட்டியின் குடும்பத்தினரிடம் பேசி, அவரது கண்கள் மற்றும் உடலை தானமாக பெறஅனுமதி பெற்றனர்.
புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண் வங்கிக்கு கண்கள் பெற்று தானமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் சிதம்பரத்தில் உள்ள மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சிதம்பரம் ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.