ADDED : மே 14, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரியில் உடல் நலக்குறைவால் இறந்த மூதாட்டியின் கண்கள் மற்றும் உடல் தானமாக வழங்கப்பட்டது.
கீழ்புவனகிரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடைஆய்வாளர் கோபால் மனைவி கோமலாஅம்மாள்,83; இவர் உடல் நலக்குறைவினால் நேற்று இறந்தார். இவரது மகன் சக்கரை ஆலை யின் ஓய்வு பெற்ற அலுவலக மேலாளர் குமார் மற்றும் குடும்பத்தினர் சம்மதத்துடன் இரு கண்களும் புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனைக்கும், உடலை சிதம்பரம் ராஜமுத்தையா அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கினார்.
சமூக ஆர்வலர்கள் முன்னின்று கண்கள் மற்றும் உடலை பெற்று அனுப்பி வைத்தனர்.