/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஒலிம்பியன் சர்க்கஸ் கடலுாரில் துவக்கம்
/
ஒலிம்பியன் சர்க்கஸ் கடலுாரில் துவக்கம்
ADDED : ஜூலை 20, 2025 06:35 AM

கடலுார் : கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில், ஒலிம்பியன் சர்க்கஸ் துவக்க விழா நடந்தது.
சர்க்கஸ் பொது மேலாளர் பாபு, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பின், அவர் கூறியதாவது: ரஷ்யாவில் கடந்த 30 ஆண்டுகளாகவும், இந்தியாவில் 2 ஆண்டுகளாகவும் புகழ்பெற்று விளங்கும் ஒலிம்பியன் சர்க்கஸில் 40 ரஷ்ய கலைஞர்களும், 160 இந்திய கலைஞர்களும் பங்கேற்று சாகசம் செய்கின்றனர். ரஷ்யா, எத்தியோபியா, மெக்சிகோ, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் நிபுணத்துவம் பெற்ற கலைஞர்கள் பங்கேற்று சாகசம் செய்கின்றனர். ரிங் ஆப் டெத், ஹேர் பேலன்ஸ், ரிங் டான்ஸ், சைக்கிளிங், ஜோக்கர் காமிக்ஸ், குளோப் மோட்டார் சைக்கிள், பார் விளையாட்டுகள், பேஸ்கட் பால், வனவிலங்குகளின் ஹாலோ கிராம் ஷோ ஆகியவை சிறப்பு அம்சங்கள் ஆகும்.
200 கலைஞர்களைக் கொண்டு 26 நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினசரி மாலை 4:00 மணி, 7:00 மணி என இரண்டு காட்சிகளும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 1:00 மணி, 4:00 மணி, இரவு 7:00 மணி என மூன்று காட்சிகள் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.