/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓம் வள்ளி விலாஸ் ஜூவல்லரி புதிய கிளை திறப்பு விழா
/
ஓம் வள்ளி விலாஸ் ஜூவல்லரி புதிய கிளை திறப்பு விழா
ADDED : பிப் 05, 2025 10:24 PM

கடலுார்; கடலுார் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் ஓம் வள்ளி விலாஸ் ஜூவல்லரி புதிய கிளை திறப்பு விழா நடந்தது.
வேளாண் விற்பனை துறை ஓய்வுபெற்ற இயக்குனர் ரங்க ராமானுஜம்-லட்சுமியம்மாள் தம்பதியர் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினர். உரிமையாளர்கள் லதா பாலு, ஆதித்யா அர்ஜூன் வரவேற்றனர்.
இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புத்தம் புதிய மாடல்களில் நகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, வைரம், ஆண்டிக் உள்ளிட்ட பொருட்களுக்கு தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாங்கப்படும் நகைகள் அனைத்தும் தரமாகவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் உள்ளன.
நிகழ்ச்சியில் எஸ்.பி.டி.ஆர்., துரைசாமி, எஸ்.பி.டி.ஆர்., ராஜா மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.