/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தடுப்புக்கட்டையில் ஆம்னி பஸ் மோதி விபத்து
/
தடுப்புக்கட்டையில் ஆம்னி பஸ் மோதி விபத்து
ADDED : மே 08, 2025 01:34 AM

கடலுார்: திருச்செந்துாரில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற பஸ், கடலுார் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
திருச்செந்துாரில் இருந்து புதுச்சேரி நோக்கிச்சென்ற ஆம்னி பஸ், நேற்று முன்தினம் இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை புதுச்சேரியை சேர்ந்த டிரைவர் பூபதி ஓட்டிவந்தார்.
நேற்று காலை ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவிலுள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பஸ்சில் இருந்த பயணிகள் கத்திக்கூச்சலிட்டனர். விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக பாதிப்பன்றி தப்பினர். பின் பாதுகாப்பாக அனைவரும் வெளியேற்றப்பட்டு, மாற்று பஸ் மூலம் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.