/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆம்னி வேன் கடத்தல் சேலம் ஆசாமி கைது
/
ஆம்னி வேன் கடத்தல் சேலம் ஆசாமி கைது
ADDED : பிப் 05, 2026 07:05 AM

வேப்பூர்: வேப்பூரில் ஆம்னி வேனை கடத்தி சென்ற, சேலம் ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் வெற்றிவேல், 47; இவரது டி.என். 91 - யூ. 1415 பதிவெண் கொண்ட மாருதி ஆம்னி வேனை, கடந்த 2ம் தேதி இரவு வேப்பூரில் உள்ள உறவினர் பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். வேனில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டிருந்தது.
நேற்று காலை வெற்றிவேலுக்கு ஆம்னி வேன், சேலம் மாவட்டம், நத்தகரை டோல் பிளாசாவை கடந்து செல்வதாக மெசேஜ் வந்தது. அதிர்ச்சியடைந்த அவர், வேன் நிறுத்திய இடத்தில் வந்து பார்த்தபோது வேன் காணாதது தெரிந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அப்போது, சேலம் மாவட்டம், நத்தக்கரை பகுதியில் வேன் இருப்பது தெரிந்தது. வேனை கடத்தி சென்ற சேலம் மாவட்டம், புளியங்குறிச்சி தமிழ்செல்வன், 33, என்பவரை போலீசார் கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர்.
தமிழ்ச்செல்வன்
தமிழ்ச்செல்வன்

