/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.ம.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள்
/
அ.ம.மு.க., சார்பில் ஜெ., பிறந்த நாள்
ADDED : பிப் 25, 2024 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் நகரில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அ.ம.மு.க., சார்பில் கொண்டாடப்பட்டது.
மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் தீபா வரவேற்றார்.
நிகழ்ச்சியில், இலக்கிய அணி அருள் ஜோதி, மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், அன்வர் பாஷா, ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.