/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அருணாச்சலா பள்ளியில் ஓணம் பண்டிகை
/
அருணாச்சலா பள்ளியில் ஓணம் பண்டிகை
ADDED : செப் 19, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அருணாச்சலா வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடினர்.
நிகழ்ச்சியை முன்னிட்டு பள்ளி முழுவதும் மலர் அலங்காரங்கள் செய்து, மாணவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. புராண மன்னர் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்க கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் சிறப்பும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ரத்தினசுப்பிரமணியன், இயக்குனர்கள் முத்துக்குமரன், வனிதா ரத்தினசுப்பிரமணியன், கல்வி ஆலோசகர் செல்வராஜ் ஆகியோர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர்.
ஒருங்கிணைப்பாளர் ரம்யா நன்றி கூறினார்.