/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கார் - பஸ் மோதல் விருதையில் ஒருவர் பலி
/
கார் - பஸ் மோதல் விருதையில் ஒருவர் பலி
ADDED : ஜூலை 18, 2025 05:17 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கார் மீது பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
திருச்சி அடுத்த பூலாங்குடி காலனி, வடக்குதெரு, செந்தில், 43; இவர், நேற்று கடலுாரில் இருந்து பிகோ காரில், விருத்தாசலம் வழியாக ஓட்டிச் சென்றார்.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே பகல் 12:30 மணிக்கு வந்தபோது, எதிரே வந்த தனியார் பஸ் நேருக்கு நேர் மோதியது.
இதில் டுகாயமடைந்த செந்தில், 108 ஆம்புலன்ஸ் மூலம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரர் மோகன் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிக்காக, சென்டர் மீடியனில் ஒரு பகுதியை தடுத்து, மற்றொரு பகுதியில் எதிரெதிர் திசையில் வாகனங்கள் சென்றன.
அப்போது, கடலுாரில் இருந்து வந்த கார் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.