/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் விழாவில் வெடி விபத்து ஒருவர் பலி: முதியவர் படுகாயம்
/
கோவில் விழாவில் வெடி விபத்து ஒருவர் பலி: முதியவர் படுகாயம்
கோவில் விழாவில் வெடி விபத்து ஒருவர் பலி: முதியவர் படுகாயம்
கோவில் விழாவில் வெடி விபத்து ஒருவர் பலி: முதியவர் படுகாயம்
ADDED : மார் 10, 2024 06:30 AM
வேப்பூர், : வேப்பூர் அருகே கோவில் விழாவில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த அரியநாச்சி கிராமத்தில் மகாசிவராத்தியையொட்டி, நேற்று முன்தினம் இரவு பெருமாள் கோவில் முன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதேபகுதியை சேர்ந்த பெரியசாமி,55; வாணவெடி விடத் துவங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக, அவர் கையில் வைத்திருந்த வாணவெடிகள் மீது தீப்பொறி விழுந்ததில், வாண வெடிகள் வெடித்து சிதறியது.
அதில் படுகாயமடைந்த பெரியசாமி சம்பவ இடத்திலேயே இறந்தார். ராமலிங்கம்,65; ஆபத்தான நிலையில் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிவிபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.