/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாடா ஏஸ் வாகனங்கள் மோதல் பண்ருட்டி அருகே ஒருவர் பலி
/
டாடா ஏஸ் வாகனங்கள் மோதல் பண்ருட்டி அருகே ஒருவர் பலி
டாடா ஏஸ் வாகனங்கள் மோதல் பண்ருட்டி அருகே ஒருவர் பலி
டாடா ஏஸ் வாகனங்கள் மோதல் பண்ருட்டி அருகே ஒருவர் பலி
ADDED : அக் 25, 2024 06:33 AM
பண்ருட்டி: பண்ருட்டி அருகே டாடா ஏஸ் வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் இறந்தார்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை சேர்ந்தவர் ராஜேஷ்,45; கீரை வியாபாரி. இவரது மகன் தனுஷ்,14. ராஜேஷ் தனது மகனுடன் டாடா ஏஸ் வாகனத்தில் கீரை ஏற்றிக் கொண்டு புதுச்சேரியில் இருந்து நேற்று காலை பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். டாடா ஏஸ் வாகனத்தை ராஜேஷ் ஓட்டினார்.
கடலுார் - பண்ருட்டி சாலையில் அண்ணாகிராமம் அடுத்த ஆண்டிப்பாளையம் சாலையில் வந்த போது அதன் மீது எதிரே பண்ருட்டியில் இருந்து தக்காளி ஏற்றிக்கொண்டு சென்ற மற்றொரு டாடா ஏஸ் வாகனம் மோதியது. இதில் ராஜேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தனுஷிற்கு கால் முறிவு ஏற்பட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.