ADDED : பிப் 07, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: மினிலாரி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்தார்.
நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவி காலனியை சேர்ந்தவர் முருகேசன்,58;இவர் நேற்று முன்தினம் இரவு தமது வீட்டின் வெளியில் படுத்து துாங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மினிலாரி லோடு கேரியர் வாகனம் துாங்கிக் கொண்டிருந்த முருகேசன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசர் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் விஜய்,23; என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

