ADDED : டிச 17, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு; பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கத்தை சேர்ந்தவர் சுகுமார், இவ ருக்கு சொந்தமான நிலத்தில், பன்றி தொல்லைக்காக மின்சார வேலி அமைத்திருந்தார்.
அதனை, தொரப்பாடியை சேர்ந்த பெருமாள், 38; கண்காணித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி பெருமாள் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் பெருமாள் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பிரிசோததனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், பெருமாள் மனைவி மற்றும் உறவினர்கள் நேற்று மாலை புதுப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு கூடி நிலத்தின் உரிமையாளரை கைது செய்யவும், நஷ்ட ஈடு கேட்டு முறையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

