ADDED : மார் 31, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; மொபட் மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.
பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஹர்புதீன்கான்,65; எலக்ட்ரீஷியன். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கீழ்கவரப்பட்டு கிராமத்தில் பால் வாங்க மொபட்டில் வந்தார். பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார்.
பக்கிரிப்பாளையம் கிராம சாலையில் திரும்பும் போது எதிரில் வந்த பைக், மொபட் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஹர்புதீன்கான் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஹர்புதீன்கான் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.