/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆன்லைன் லாட்டரி விற்பனை; ஒருவர் கைது
/
ஆன்லைன் லாட்டரி விற்பனை; ஒருவர் கைது
ADDED : ஜன 09, 2024 06:58 AM
புவனகிரி : புவனகிரியில் லாட்டரி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.
புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புவனகிரி ராமலிங்கசாமி கோவில் சந்தில் உள்ள ஒரு தனியார் பேன்சி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்துகொண்டிருந்தார்.
உடன் போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர் புவனகிரி லிங்க பைரவி நகர் ஜோதி, 53; எனத் தெரியவந்தது. உடன் அவரை போலீசார் கைது செய்து, ரூ.2 ,220 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் தப்பியோடிய மீன்சுருட்டி காட்டு அகரத்தை சேர்ந்த ராசப்பன் என்பரை தேடி வருகின்றனர்.