ADDED : ஜூன் 29, 2025 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த லால்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு, சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம் மற்றும் சல்லாணி குடும்பத்தினர் சார்பில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டி தரப்பட்டது.
வகுப்பறை கட்டடம் திறப்பு விழாவில், சங்க தலைவர் மணியன் தலைமை தாங்கினார். செயலாளர் மகேஷ் முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார். சல்லாணி குடும்பத்தைச் சேர்ந்த மாணக்சந்த், சுனில்குமார், மணிஷ்குமார் ஆகியோர், புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தனர். விழாவில், சத்தியமூர்த்தி, மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
சங்க பொருளாளர் சைலேஷ் நன்றி கூறினார்.