/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருச்சின்னபுரம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
/
திருச்சின்னபுரம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
திருச்சின்னபுரம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
திருச்சின்னபுரம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
ADDED : அக் 20, 2024 07:01 AM

காட்டுமன்னார்கோவில் : திருச்சின்னபுரம் ஊராட்சியில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டடத்தை சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த திருச்சின்னபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டது.
நேற்று திறப்பு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் மின்னொளி குழந்தைசாமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ரமணிபாய் வரவேற்றார். சிந்தனைச்செல்வம் குத்துவிளக்கேற்றி வகுப்பறையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் சிவக்குமார், பி.டி.ஓ.,க்கள் ஜெயகுமாரி, மீனாட்சி சுந்தரம், வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், ராமதாஸ், வட்டார வள மையம் விஜயகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சவிதா, வருவாய் ஆய்வாளர் சீனுவாசன், தி.மு.க., கிளை செயலாளர் செந்தில்குமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மணவாளன், ஒன்றிய கவுன்சிலர் உத்திராபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊராட்சி துணைத் தலைவர் நிஜிஸ்குமார் நன்றி கூறினார்.