ADDED : நவ 15, 2025 10:46 PM

புவனகிரி: புதிய ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்தை வேளாண்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
மேல்புவனகிரி அருகே வடக்குத்திட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் 15வது மானிய நிதியின் கீழ், ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி செயலக கட்டடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகமும் இணைந்து ஒரே இடத்திலேயே அனைத்து அலுவலக பணிகளும் மேற்கொள்ளும் வகையில் புதிய கட்டப்பட்டது.
இதற்கான திறப்பு விழாவில் ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் வரவேற்றார்.
கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் பிரியங்கா முன்னிலை வகித்தனர். அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதிய கட்டத்தை திறந்து வைத்தார். ஊராட்சி செயலாளர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.

