ADDED : ஏப் 09, 2025 06:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : கவணையில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழா நடந்தது.
விருத்தாசலம் அடுத்த கவணை கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் முற்றிலும் சேதமடைந்தது. அதைத்தொடர்ந்து, புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டித் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி 16.45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் மகாலட்சுமி தலைமை தாங்கி, அங்கன்வாடி கட்டடத்தை திறந்து வைத்தார். ஆசிரியர் பெருந்தேவி, உதவி ஆசிரியர் விஜயப்பிரியா முன்னிலை வகித்தனர்.
அங்கன்வாடி பொறுப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.