ADDED : ஏப் 13, 2025 05:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு, : பெரிய நெல்லிக்கொல்லையில் புதிய நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
புவனகிரி தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சேத்தியாத்தோப்பு அடுத்த பெரிய நெல்லிக்கொல்லை கிராமத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ.,தலைமை தாங்கி திறந்து வைத்தார்.
புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், துணை செயலாளர் வீரமூர்த்தி, ஒன்றிய அவைத் தலைவர் செல்வராசு,ஒன்றிய துணை செயலாளர் பிரித்திவி, பேரவை செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர். ஜெயசீலன் வரவேற்றார்.
நிர்வாகிகள் மணிகண்டன், கார்த்தி, கிளை செயலாளர்கள் ஜான்போஸ்கோ, மணிகண்டன், ஜெலிஸ் ஜான்பீட்டர், சேகர், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

