UPDATED : அக் 05, 2026 01:13 AM
ADDED : அக் 05, 2026 01:09 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு சேவா மருத்துவமனை 5ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது .
சேவா மருத்துவமனை, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை, அரிமா சங்கம் இணைந்து நடத்திய முகாமிற்கு, டாக்டர் முத்தமிழன் தலைமை தாங்கினார்.
மகாத்மா காந்தி மருத்துவமனை கண் டாக்டர்கள், அரிமா சங்க தலைவர் ஜெயசீலன், செயலாளர் வினோத்கண்ணன், பொருளாளர் ரஞ்சிதா தமிழ் மன்ற நிர்வாகி தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவமனை நிர்வாகி சேரலாதன் வரவேற்றார்.முகாமில், கண் அழுத்தநீர், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் கண் பரிசோதனையில் கிட்ட பார்வை, துாரப்பார்வை, மாலைக்கண் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை செய்தனர்.
முகாமில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களில், 50 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
