UPDATED : அக் 05, 2026 01:13 AM
ADDED : அக் 05, 2026 01:08 AM

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி., சார்பில் மாணவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட துாய்மை பணி நடந்தது
நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துாய்மையே சேவை –2026ன் ஒரு பகுதியாக, நெய்வேலியில் மாபெரும் துாய்மை பணி நடந்தது.
இந்த நிகழ்வில் என்.எல்.சி.ஐ.எல் ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் மற்றும், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்வை என்.எல்.சி நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா முன்னிலையில், மனிதவளத்துறை இயக்குனர் மற்றும் மின்துறை இயக்குனர் (பொறுப்பு) சமீர் ஸ்வரூப் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்வில் என்.எல்.சி நிறுவன செயல் இயக்குனர்கள், உயர் அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள், அனைத்து பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்கள், எஸ்.சி எஸ்.டி மற்றும் ஓ.பி.சி., நல கூட்டமைப்புகள், பொதுத்துறை நிறுவன பெண்கள் அமைப்பு நிர்வாகிகள், சொசைட்டி பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
