/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில் இறந்த வாலிபர் குடும்பத்திற்கு ரூ.52.61 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ADDED : டிச 16, 2025 04:03 AM
கடலுார்: விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் இறந்த வாலிபர் குடும்பத்திற்கு 52,61,562 ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் தாலுகா, கீழபாலையூரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மகன் பாண்டியராஜன், 29; இவர் கடந்த 21.11.2022 அன்று கருவேப்பிலங்குறிச்சி விருத்தாசலம் மெயின் ரோட்டில், பைக்கில் சென்றார். அங்குள்ள மளிகை கடை அருகே சென்றபோது, எதிர் திசையில் வந்த பைக் மோதியதில் பாண்டியராஜன் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக அவரது மனைவி அபிராமி, தந்தை பாலசுப்புரமணியன், தாய் ஆரவள்ளி, மகன் பவனேஷ், மகள் யாஷிகா ஆகியோர்களுக்காக விருத்தாசலம் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கறிஞர் சந்திரசேகரன், வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி விஜயகுமார் நேற்று தீர்ப்பு கூறினார். விபத்தில் பலியான பாண்டியராஜன் குடும்பத்தறி்கு 41,46,400 ரூபாய் வட்டியுடன் சேர்த்து 52,61,562 ரூபாய் காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவிட்டார்.