/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காட்டுமன்னார்கோவில் டெல்டா பாசனத்திற்கு கீழணையில் தண்ணீர் திறப்பு
/
காட்டுமன்னார்கோவில் டெல்டா பாசனத்திற்கு கீழணையில் தண்ணீர் திறப்பு
காட்டுமன்னார்கோவில் டெல்டா பாசனத்திற்கு கீழணையில் தண்ணீர் திறப்பு
காட்டுமன்னார்கோவில் டெல்டா பாசனத்திற்கு கீழணையில் தண்ணீர் திறப்பு
ADDED : டிச 16, 2025 04:04 AM
காட்டுமன்னார்கோவில்: டெல்டா பாசனத்திற்கு கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
காட்டுமன்னார்கோவில் குமராட்சி டெல்டா பகுதியில் 60,000 ஏக்கர் ஒருபோக சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்டாவில் பெய்த வடகிழக்கு பருவமழையால், சாகுபடி நிலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
இதனால் கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு, கடந்த 12ம் தேதி முதல் டெல்டா பாசனத்திற்கு முற்றிலும் தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டது.
சம்பா நெல் சாகுபடி நிலங்களில் தண்ணீர் முழுவதும் வடிய செய்து பூச்சிகள் தாக்குதல் கட்டுப்படுத்தப்ப ட்டது.
தற்போது டெல்டாவில் மழை இல்லாததால் சம்பா சாகுபடி நிலங்களில் தண்ணீர் இல்லாமல் வரட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், டெல்டா விவசாயின் கோரிக்கையை ஏற்று கீழணையில் இருந்து பாசனத்திற்கு மீண்டும் திறந்து விடப்படுகிறது.
கீழணைக்கு தண்ணீர் வரத்து 926 கனடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 8.5 அடி. கீழணையில் இருந்து வடவற்றில் 291 கன அடி, வடக்கு ராஜன் வாய்க்கால் 225 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்கால் 400 கன அடி, மற்ற சிறு பாசன வாய்க்கால் 10 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீராணம் ஏரி நீர்மட்டம் 46. 15 அடியாக உள்ளது. வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 120 கன அடியாக உள்ளது. ஏரியிலிருந்து டெல்டா பாசனத்திற்கு 190 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடி நீருக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது குறிப்பிடதக்கது.

