/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதயாத்திரை பாக்தர்கள் காவடி ஊர்வலம்
/
பாதயாத்திரை பாக்தர்கள் காவடி ஊர்வலம்
ADDED : ஜன 29, 2026 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது.
விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடியில் பழனி பாதயாத்திரை பக்தர்களின் 14ம் ஆண்டு காவடி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது.
இதையொட்டி திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சுவாமிக்கு காலை 7:00 மணிக்கு அபிேஷக ஆராதனை, காலை 10:00 மணிக்கு தீபாராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து, காலை 11:00 மணியளவில் பாதயாத்திரை பக்தர்கள் சின்னவடவாடி குளக்கரையில் இருந்து பால், இளநீர் காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரினசம் செய்தனர்.

