தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டியதால் பரபரப்பு

நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டியதால் பரபரப்பு

நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டியதால் பரபரப்பு


ADDED : ஆக 21, 2026 04:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 04:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: பி.என்.பாளையம் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களை ஆளும்கட்சியினர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் குறுவை பட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய, அரசு சார்பில் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு நெல் விற்பனை செய்ய விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து, அந்த சீனியாரிட்டை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதை அத்துறை அமைச்சரும் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தில் இயங்கி வரும் கொள்முதல் நிலையத்தில், நெல் விற்பனை செய்ய 11 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அண்ணாகிராமத்தை சேர்ந்த த.வெ.க., பிரமுகரான விவசாயி ஒருவர் 12வதாக பதிவு செய்துள்ளார். ஆனால், அவர் தனது நெல்லை முதலில் கொள்முதல் செய்ய வேண்டும் என கூறினார். அதற்கு 11 விவசாயிகள் சீனியாரிட்டி அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் என பணியாளர்களிடம் தகராறு செய்தனர். இந்நிலையில் அரசின் சட்ட ஆலோசகர் மற்றும் அமைச்சரின் உதவியாளர் எனக்கூறி இருவர் கொள்முதல் பணியாளரை போனில் தொடர்பு கொண்டு, ஆளுங்கட்சி பிரமுகரின் நெல்லை முதலில் கொள்முதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அமைச்சரிடம் கூறுவோம் என மிரட்டினர்.

ஆனால், விவசாயிகள் தகராறு செய்வதால் சீனியாரிட்டி அடிப்படையிலேயே கொள்முதல் செய்ய முடியும். அமைச்சர் கேட்டால் நான் பதில் சொல்லி கொள்கிறேன் என பணியாளர் கூறினார். இச்சம்பவத்தால், பி.என்.பாளையம் கொள்முதல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறுகையில், நாங்கள் விவசாயிகளுக்கு பயப்படுவதா அல்லது ஆளுங்கட்சியினருக்கு பயப்படுவதா என தெரியவில்லை. கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை மழையில் காப்பாற்றுவதே சிரமமாக உள்ளது. இதில் இதுபோன்ற பிரச்னையால் எப்படி வேலை செய்வது என தெரியவில்லை என புலம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us